தினகரனுக்கு எதிராக சசிகலா அணியின் அமைச்சர்கள் திடீரென போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் தமிழக அரசியல் வானிலையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக அமைச்சர்கள் கூடி பேசி எடுத்துள்ள முடிவுக்கு எதிராக பல எம்எல்ஏக்கள் ஒன்று திரண்டு தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரனின் வீட்டில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வெற்றிவேல்,தங்கத் தமிழ் செல்வன்,ஜக்கையன் கதிர்காமுஉள்ளிட்ட 7 பேர் கலந்த கொண்டனர்.

மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  நாஞ்சி சம்பத். அதிமுகவில் பிளவு என்பதே இல்லை என தெரிவித்தார்.

தற்போது போர்க் கொடி உயர்த்தியுள்ள அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.