மே மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல்களில் பொதுச் சின்னம் பெறவேண்டும் என்றால், அமமுகவை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அவசரமாக கட்சியை பதிவு செய்ய டி.டி.வி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

அமமுகவை பதிவு செய்ய டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளார். அதன்படி கட்சியை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என்றும், கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமமுக அங்கீகாரம் இல்லாத கட்சி என்பது குக்க்சர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றம் சென்றபோதே பரவலாக தெரிய வந்தது. சொந்தமாக ஒரு கட்சி என்ற அங்கீகாரம் கூட இல்லாத காரணத்தினால் சின்னம் கிடைப்பதில பிரச்னை ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் குக்கர், தொப்பி சின்னங்களை பறித்துக் கொண்டதை எண்ணிக் கலங்கி விட்டார் டி.டி.வி.

 

அமமுக வேட்பாளர்கள் அனைவரும் "சுயேட்சை" ஆகவே கருதப்படுவர் என தேர்தல் ஆணையம் கூறியது டி.டி.வி. அணியின் தன்மானத்தை உரசிப்பார்த்து விட்டது. இடைத்தேர்தலிலும் மக்களவை தேர்தலிலும் ஓவ்வொரு தொகுதிக்கும் மாறுபட்ட சின்னங்கள் கிடைக்கலாம் என்றே அச்சம் ஏற்பட்டு வந்த நிலையில் 40 மக்களவை, 18 இடைத்தேர்தலையும் சேர்த்து 59 இடங்களில் போட்டியிட ஒரே சின்னத்தை அமமுகவுக்கு ஒதுக்க உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு பரிசீலனை செய்தது. உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யச் சொல்லியிருக்காவிடில் நிச்சயம் இந்தத் தேர்தலில் அமமுக சின்னம் விஷயத்தில் சின்னாபின்னமாகி இருக்கும். 

உச்சநீதிமன்றம் அமமுகவுக்கு 59 தொகுதிகளுக்கு மட்டுமே பரிசு பெட்டி சின்னம் ஒதுக்க பரிசீலனை செய்தது. ஆக 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், புதுவை தமிழகத்தில் 40 மக்களவை தொகுதிகளையும் சேர்ந்து மொத்தம் 58 தொகுதிகளில் பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. மீதம் ஒரு தொகுதியில் மட்டுமே பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிட முடியும் தற்போது 4 தொகுதிகளில் மீண்டும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த நாகு தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே பரிசு பெட்டகம் சின்னத்தில் அமமுக போட்டியிட முடியும்.

மீதமுள்ள 3 தொகுதிகளில் வெவ்வேறு சின்னங்களே கிடைக்கும். ஆகையால் கட்சியாக பதிவு செய்து விட்டால் எப்போதும் ஒரே சின்னத்தை நிரந்தரமாக வாங்கி விடலாம் என்கிற திட்டத்தில் இப்போது அமமுகவை கட்சியாக பதிவு செய்ய அவசரம் காட்டுகிறார் டி.டி.வி.தினகரன்..!