ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமமுக பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவுமான டி.டி.வி.தினகரன், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்துள்ளார். துணைப் பொதுச் செயலாளராக பழனியப்பன், எம்.ரெங்கசாமி, பொருளாளராக வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளராக மனோகரன், கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரை நியமித்துள்ளார். 

நடந்து முடிந்த 38 மக்களவை தொகுதிக்கான தேர்தலிலும் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் அமமுகவில் இருந்த நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுகவிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டி.டி.வி.தினகரன் சந்தித்துப் பேசினார். அங்கே டிக் அடிக்கப்பட்ட நிர்வாகிகளை அறிவித்தார் டிடிவி தினகரன்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நிர்வாகிகள் வைத்துதான் கட்சி இருக்கிறதா? பதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஒரு நிர்வாகி கட்சியை விட்டு செல்வதனால் இயக்கம் வீழ்ச்சி அடைந்து விடும் என்பதை எதிர்காலம் நிச்சயம் பொய்யாக்கும். நிர்வாகிகள் அமமுகவில் இருந்து வெளியேறுவது சசிகலாவுக்கு தெரியும். தமிழக அரசு ஆர்.கே.நகர் தொகுதியை புறக்கணித்து வருகிறது. அதேபோல் தங்களது தொகுதிகளும் புறக்கணிக்கப்படக்கூடாது. பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என இரத்தினசபாபதி, கலைச்செல்வன் மீண்டும் அணி மாறியுள்ளனர்’’ என அவர் தெரிவித்தார்.