Asianet News TamilAsianet News Tamil

டி.டி.வி.தினகரன் வெளியே... திவாகரன் வெளியே... சசிகலா குடும்பத்திற்குள் கோஷ்டி மோதல்..!

அதிமுக – அமமுக – திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளை சசிகலாவின் தலைமையின் கீழ் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

TTV Dhinakaran out ... Diwakaran out ... factional clash within Sasikala family
Author
Tamil Nadu, First Published Feb 5, 2021, 10:01 AM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் வரும் 8-ம் தேதி காலை தமிழகம் வருவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த சூழலில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுதொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன.TTV Dhinakaran out ... Diwakaran out ... factional clash within Sasikala family

சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள 100% வாய்ப்பில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறி வருகிறார். அதற்கேற்றார் போலவே சசிகலாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டும் நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். எனினும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசும் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தனிக்கதை.

.TTV Dhinakaran out ... Diwakaran out ... factional clash within Sasikala family

சசிகலா குடும்பத்தில் தினகரன் தரப்பு – திவாகாரன் தரப்பு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் தினகரனை மட்டும் தனித்துவிட்டு, அதிமுக – அமமுக – திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளை சசிகலாவின் தலைமையின் கீழ் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் தென் மாவட்டங்கள் ஓபிஎஸ் – இபிஎஸ் மற்றும் சசிகலா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடும்பத்தினர் முதல்வரை சந்தித்து பேசியிருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.TTV Dhinakaran out ... Diwakaran out ... factional clash within Sasikala family

ஆனால் எதிரியோடு பயணித்தாலும், துரோகியோடு பயணிக்க மாட்டோம் என்று அமமுகவினர் கூறிவருகின்றனர். அதாவது ஓபிஎஸ்- உடன் நாங்கள் சேர்ந்தாலும் சேருவோம், எடப்பாடியோடு சேரமாட்டோம் என்பதே இதற்கு அர்த்தம்.. ஏனெனில் பழனிசாமிக்கு ஆட்சி பொறுப்பை வழங்கிய சசிகலாவுக்கு தற்பொது கட்சியில் இடம் இல்லை என்று கூறும் எடப்பாடியோடு சசிகலா இணைவாரா என்பது சந்தேகம் தான்.

Follow Us:
Download App:
  • android
  • ios