முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி, உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு குறித்து சட்டசபை அலுவலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, திருவாரூர் தொகுதிக்கு  வரும் 28ம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை 31ம் தேதி நடைபெறும்  தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது.   

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

இதற்கு முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில்  டிடிவி தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றியை கைப்பற்றினார். இதே போன்று, திருவாரூர் தொகுதியிலும் குக்கர் சின்னத்தை வைத்து வெற்றி பெற டிடிவி தினகரன் செய்துள்ளதால், குக்கர் கேட்டு கோர்ட் படி ஏறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.