Asianet News TamilAsianet News Tamil

டிடிவியின் சகோதரர் பாஸ்கரன் புதிய கட்சி தொடக்கம்! மதுரையில் பரபரப்பு...

டிடிவி தினகரனின் சகோதரர் டிடிவி பாஸ்கரன், புதிய கட்சி ஒன்றை இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் அவர் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார். 
 

ttv brother start the new political party
Author
Madurai, First Published Sep 15, 2018, 4:52 PM IST

டிடிவி தினகரனின் சகோதரர் டிடிவி பாஸ்கரன், புதிய கட்சி ஒன்றை இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் அவர் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக அணிகளாக பிளவுபட்டது. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைக்கப்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இவர்களது அணி ஒன்றிணைந்தது.

இதன் பிறகு டிடிவி தினகரன் அணி தனியாக செயல்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கினார். அதன் பொது செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராக டிடிவி தினகரனும் இருந்து வருகின்றனர். 

டிடிவி தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் அம்மா அணி என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினார். இதன் பின்பு அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார் திவாகரன். சசிகலா குடும்பத்தில் தற்போது புதிய கட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை டிடிவி தினகரனின் சகோதரர் டிடிவி பாஸ்கரன். தொடங்கியுள்ளார். பாஸ்கரன் தனது புதிய கட்சிக்கு, அண்ணா - எம்.ஜி.ஆர். மக்கள் கழகம் என்று பெயரிட்டுள்ளார்.

தனது புதிய கட்சியின் பெயரில், அம்மா, சின்னம்மாவை ஓரம்கட்டிவிட்டு, அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் பிரதானப்படுத்தியுள்ளார். இதன் பின்பு பாஸ்கரன், கட்சியின் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். பின்ன்ர செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன், அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் ஊழலற்ற நிர்வாகத்தை தரவே கட்சி ஆரம்பித்துள்ளேன் என்றார். எம்ஜி.ஆர். தொண்டர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவே எனது இயக்கத்தை கட்சியாக அறிவித்துள்ளேன். மீண்டும் மோடியை பிரதமராக்க பாடுபடுவேன். ஊழலற்ற இந்தியாவின் இறையான்மையைக் காக்கும் மோடிக்கு முழு ஆதரவு என்று கூறினார். 

ஆகஸ்ட் 30 ஆம் தேதி கட்சி துவங்க திட்டமிட்டிருந்தேன், ஆனால், ஆளும் கட்சியின் பல்வேறு இடையூறுகள் காரணமாக மாநாடு நடத்தப்படவில்லை. இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி யார் செய்ய நினைத்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நாங்கள் நிர்வாகத்துக்கு வந்தால், தனித்தனி துறைக்கு நிதி ஒதுக்குவோம். 15 ஆண்டுகள் குஜராத்தில் முதலமைச்சராகவும், 4 ஆண்டுகள் இந்திய பிரதமராகவும் இருக்கும் மோடி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று டிடிவி பாஸ்கரன் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios