Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் போராட்டத்தை தூண்டும் பீட்டா... ஜல்லிக்கட்டை நிறுத்த முயற்சி..!

ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Try to stop beta jellikattu
Author
Tamil Nadu, First Published Jun 4, 2019, 12:35 PM IST

ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Try to stop beta jellikattu

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது. சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், கடந்த 2016ம் ஆண்டு  மெரினாவில் நடந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சிப்  போராட்டமாக உருவெடுத்தது. இதனைத் தொடா்ந்து அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற்றது. Try to stop beta jellikattu

இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது 8 போ் இறந்துள்ளனர். ஏராளமான வீரா்கள் மற்றும் காளைகள் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது காளைகள் சுமார் 16 மணி நேரம் வரை வரிசையில் நிற்க வைக்கப்ப்டடு கொடுமைப் படுத்தப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டுப் போட்டியை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்வோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios