தக்கலை அருகே சுவாமியார்மடத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர். அதில் இருவர் மட்டும் கவலைக்கிடமாக உள்ளனர். அந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் தூக்கிவீசப்படும் காட்சிகளும், அந்த கார் அப்பளம் போல நொறுங்கும்  பதபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் சகாயதாஸ் 50-வயதான இவர் நேற்று அதிகாலை தனது இரண்டு மகள் மற்றும் மகனுடன் அவரது உறவினர் உட்பட 8-நபர்களுடன் நேற்று அதிகாலை நாகர்கோவிலில் உள்ள தேவாலயத்திற்கு கூட்டு பிரார்த்தனைக்காக மார்த்தாண்டத்தில் இருந்து மார்த்தாண்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தனது டாட்டா சுமோ வாகனத்தில் சென்றுள்ளார். 

வாகனம் தக்கலை அருகே சுவாமியார்மடம் தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது எதிரே அதிவேகமாக கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்த காய்கறி லாரி டாடாசுமோ வாகனத்தின்மீது மோதியது அதில் வாகனமே உருக்குலைந்தது. அதில் இருந்த 8-பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிர்ஷ்ட வசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதனையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அதில் இருவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை கூறியுள்ளது. 

இந் நிலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி  டிரைவர் ரவிச்சந்திரன் லாரியை நிறுத்தாமல் கொண்டு சென்ற நிலையில் தக்கலை போலீசார் லாரி மற்றும் லாரி டிரைவர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது அந்த விபத்து குறித்த பதபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது அதில் கார் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் அந்த காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் சாலையில் விழுந்து கிடக்கும் தாய் தந்தையை பார்த்து கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இதோ அந்த காட்சிகள்.

"