Trichy Siva meeting with Commissioner election
ஆர்கே நகர் தொகுதி இடை தேர்தல் அடுத்த மாதம் 12ம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.
அதிமுகவில் 3 அணிகளாக செயல்படுவதால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது போட்டா போட்டியா உள்ளது. இதில், சசிகலா அணியில் டி.டி.வி.தினகரனும், 2வது அணியில் தீபாவும் களம் இறங்கியுள்ளனர். ஓ.பி.எஸ். அணியில் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இதையொட்டி இன்று மாநிலங்களவை துணை சபாநாயகர், தம்பிதுரை தங்களது அணிக்கு இரட்டை இலை வேண்டும் என இன்று தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடை தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.
இதைதொடர்ந்து, இன்று திமுக எம்பி திருச்சி சிவா தலைமையில், தேர்தல் தலைமை ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்கின்றனர்.
அப்போது, ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற உள்ள இடை தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், பணப்பட்டுவாடா இல்லாமலும் நடத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளனர்.

