Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சிக்கு வந்தாலே சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஸ்டாலினை விளாசும் டிடிவி.தினகரன்..!

சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் இப்படிக் கொல்லப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாகத் தொடங்கியிருக்கிறதோ? 

trichy SI Murder case...dmk government slams ttv dhinakaran
Author
Trichy, First Published Nov 21, 2021, 4:56 PM IST

ரோந்துப் பணிக்குச் சென்ற பூமிநாதன், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்புக் கருவிகள் எதுவும் கையில் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் கிடந்து போராடி உயிர்விட்டதாக வரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக  பூமிநாதன் பணியாற்றி வருகிறாார். இவர் புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பலை  பிடிக்க இன்று அதிகாலை 2 மணியளவில் தனி ஆளாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பூமிநாதன் சம்ப இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

trichy SI Murder case...dmk government slams ttv dhinakaran

இந்நிலையில்,  சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் இப்படிக் கொல்லப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- திருச்சி நவல்பட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

trichy SI Murder case...dmk government slams ttv dhinakaran

ரோந்துப் பணிக்குச் சென்ற பூமிநாதன், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்புக் கருவிகள் எதுவும் கையில் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் கிடந்து போராடி உயிர்விட்டதாக வரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.

சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் இப்படிக் கொல்லப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாகத் தொடங்கியிருக்கிறதோ? காவல் துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios