உள்ளாட்சி தேர்தல் எப்போது? மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவாரா போன்ற கேள்விகளுக்கு ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்து கூறியுள்ளார். 

ஆடி 31 க்கு பிறகு ஆவணி அல்லது புரட்டாசியில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வரும். கண்டிப்பாக இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளிலும் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 

மு.க.ஸ்டாலின் ஜாதகத்தை நெட்டில் கண்டு பிடித்தேன். அவர் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. கர்நாடக அரசியலை பொறுத்தவரை குமாரசாமி தான் கிங் மேக்கராக இருப்பார். எடியூரப்பா முதல்வராக முடியாது’’ என அவர் கணித்துள்ளார். 

இதே ஜோதிடர் பாலாஜி ஹாசன் தான் கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது. உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார். கனிமொழி மட்டுமே திமுகவிற்கு எல்லாமுமாக மாறுவார். 2024ல் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும் என கணித்து இருந்தார். இப்போது அப்படியே உல்டாவாக கணித்துள்ளார்.