அங்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு சிக்கிவிடக்கூடாது என்பதற்காக சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புயல் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது. அந்தமான் நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் பயணத்தை திவிர்ப்பது நல்லது என்றும் அப்படி வரும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலாக இருந்தாலும் சரி, அது மழையாக இருந்தாலும் சரி அல்லது சுனாமியாக இருந்தாலும் சரி அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக அந்தமான் நிக்கோபார் தீவு இருந்து வருகிறது. சுனாமி ஏற்பட்ட போது இந்தோனேசியாவுக்கு அடுத்து அந்தமான் நிகோபர் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அந்த வகையில் வரும் 19ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை அந்தமான் நிக்கோபர் தீவுக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிகோபார் தீவுகளுக்கு அருகே வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது மெல்ல மெல்ல புயலாக உருவாகி அந்தமான் நிக்கோபர் தீவுகளை தாக்கும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு அனைத்து வகையான சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நாட்களில் சுற்றுலா பயணிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் நெருங்குவதால் ஏராளமானோர் அந்தமான் நிக்கோபர் தீவுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அந்தமான் நிக்கோபாருக்கு சென்று வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் அந்தமானுக்கு 9 பயணிகள் விமான நிலையம் சென்று வருகின்றன. அந்த விமானங்களில் 1500க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இதில் அதிகமானோர் சுற்றுலா பயணிகளாகவே உள்ளனர்.
அங்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு சிக்கிவிடக்கூடாது என்பதற்காக சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தமானில் சுற்றுலா தலங்கள் வரும் 22ஆம் தேதி வரை மூடப்பட்டிருப்பது குறித்தும் சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். சென்னையிலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுடைய பயணங்களை வரும் 22ஆம் தேதி வரை தவிர்த்துக் கொள்வது நல்லது என்றும் அறிவித்து வருகின்றனர்.

இதேபோல அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள் கவுன்டர்களில் இந்த தேதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு செல்போன்கள் மூலமாகவும், புயல் எச்சரிக்கை பற்றி குறுந்தகவலை அனுப்பி வருகின்றனர். இதனால் சுற்றுலா செல்லும் திட்டத்தில் இருந்த பல பயணிகள் தங்களது திட்டத்தை மாற்றி வருகின்றனர். குறிப்பாக விமான டிக்கட் பதிவு செய்தவர்கள் தங்களது பயணங்களை ரத்து செய்து வருவதுடன் தங்களது தேதிகளை மாற்றி கொள்வதாகவும், அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
