முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் தனது  சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.

அதிமுகவில் பிரிந்து கிடக்கும் இரு அணிகளின் இணைவதற்கான பேச்சுவார்த்தை தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

இதுகுறித்த பேச்சுவார்த்தை எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், ஓ.எம்.ஆர். சாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், மதுசூதனன், மைத்ரேயன் எம்.பி., முனுசாமி, பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

இந்த கூட்டத்திற்கு பின் ஒ.பி.எஸ் கருத்து கணிப்பு கேட்டு தமிழகத்தில் சுற்றுபயனத்தை தொடங்கினார். இந்த சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார்.

இதில், எடப்பாடி அணியும், ஒ.பி.எஸ் அணியும் இணையலாமா வேண்டாமா என்பது குறித்தும், ஜெயலலிதா மரணம் குறித்தும் கருத்து கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.