transgender protest

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையை கண்டித்து மாநிலங்களில் பல இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டமும் நடைபெற்று வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இறந்தவர்களின் வலியையும் அவர்கள் குடும்பம் அடையும் வேதனைகளையும் தெரிவிக்கும் விதமாக திருநங்கைகளால் ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து விநோத போராட்டம் நடத்தினர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடந்த தூத்துகுடி நகரத்திற்கு ஆளும் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வரவில்லை எனப் பாடி இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.