T.Rajendar press meet about M.K.Staline

ஜெயலலிதா சாவில் மர்மம், தமிழக அரசின் மந்தமான செயல்பாடுகள் என எது குறித்தும் உருப்படியான போராட்டம் நடத்தாமல் 88 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என லட்சிய திமுக தலைவர் டி.ஆர்.கேள்வி எழுப்பியுள்ளார்..

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். அதிமுக தற்போது மூன்று அணியாக பிரிந்து கிடந்தாலும் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதாக கூறினார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஓபிஎஸ்தான் காபந்து முதலமைச்சராக இருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பத குறித்து அவர் கவலைப்படவில்லை என டி,ஆர்குற்றம்சாட்டினார். அப்போது யார் நாடகம் நடத்தினார்கள் ? அதைக் கேட்க யாருக்காகவது துணிச்சல் இருந்ததா? என கேள்வி எழுப்பினார்.

எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வெட்டியாக பேட்டிதான் கொடுத்துக் கொண்டிருந்தார் என அவரை டி.ஆர்.கிண்டல் செய்தார்.

பெண்கள் கூட மாவரைச்சுடுவாங்க, ஆனால் இந்த ஸ்டாலின் 88 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு என்ன பண்றார்? என டி.ஆர். கேள்வி எழுப்பினார்?

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது கண்டிக்தக்கது என்றும் இது குறித்து விழிப்புணர்வு வேண்டும் என்றும் டி.ஆர். கேட்டுக்கொண்டார்