trafic Ramasamy case file against Dinakaran for RK Nagar Victory
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். டிடிவி தினகரனின் இந்த மெகா வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சமூக ஆர்வலர் டிராப்பிக் ராமசாமி கூறியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராப்பிக் ராமசாமி. சில மாதங்களுக்கு முன்பு ஊழல் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி டிராபிக் ராமசாமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இவர் தற்போது மீண்டும் களத்துக்கு வந்துவிட்டார்.
ஆர். கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான டிராப்பிக் ராமசாமி தினகரன்மீது வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது; ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரனின் வெற்றியை ஏற்றுக்கொள்ள இயலாது. அவருக்கு எதிராக விரைவில் வழக்கு தொடர்வேன் . எனினும் அனைவரையும் எதிர்த்து போட்டியிட்ட அவரின் மன உறுதியை வாழ்த்துகிறேன். ஆனால் இந்த வெற்றி சரியான முறையில் கிடைத்தது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
