சாலை போக்குவரத்துக்கான கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, சமீபத்தில் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்தார். 

இந்நிலையில், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அபராதம் குறைவாக இருப்பதால் விதிமீறலில் ஈடுபடுவோர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ள போக்குவரத்து போலீசார், தமிழகத்தில் சென்னையில் முதலில் இது அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

* சாலைகளில் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டால், ரூ.5 ஆயிரம் அபராதம்

* மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராதம்

* பர்மிட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

* பைக்கில் அதிகம் பேர் சென்றால், ரூ.2 ஆயிரம் அபராதம்; டிரைவிங் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு தகுதி இழப்பு

* ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்; டிரைவிங் லைசன்ஸ் 3 மாதங்களுக்கு தகுதி இழப்பு

* காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டினால், ரூ.1000 அபராதம்

* டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் (முன்பு ரூ.500)

* டிரைவிங் லைசன்ஸ் தகுதி இழப்புக்கு பின்பும் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

* போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.500 (முன்பு ரூ.100)

* சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறுதலுக்கு ரூ.500 அபராதம் (முன்பு ரூ.100)