சர்வதேச பல்மருத்துவ அமைப்பின் மாநாடு சென்னை சவிதா மருத்துவ கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் சுகாதாரத்துறையில் 2030ம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை தற்போதே அடைந்து விட்டதாக குறிப்பிட்டார். 

இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் புதிதாக உருவாக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளில் 85 சதவிகித இடத்தை தமிழக மாணவர்கள் பெறுவார்கள் என்றார்.

விரைவில்  புதிய பல்மருத்துவ இடங்கள் தோற்றுவிக்கப்டும் என்றும், கூடிய விரைவில் மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கான அரசாணையும் கூடிய விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். 

இந்த நடமாடும் மருத்துவக்குழு வந்தால் பொதுமக்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் எனவும் பல்வலிக்கு டாக்டர்கள் விடு தேடி வந்து சிகிச்சை அளிப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.