Asianet News TamilAsianet News Tamil

நாளை மறுநாள்... பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் மு.க.ஸ்டாலின்..!

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Tomorrow is the next day ... MK Stalin will give a pleasant surprise to the public ..!
Author
Tamil Nadu, First Published May 8, 2021, 2:36 PM IST

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Tomorrow is the next day ... MK Stalin will give a pleasant surprise to the public ..!

தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று  முதல்வராக பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்றுகொண்டதும். பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண உதவி ரூ.4,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 கோப்புகளில் முதலாவதாக கையெழுத்திட்டார்.

முதல் தவணையாக மே மாதம்  ரூ 2000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் வரும் 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் அதாவது 10-ஆம் தேதி முதல் கொரோனா நிவாரண திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்.Tomorrow is the next day ... MK Stalin will give a pleasant surprise to the public ..!

இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ’’10ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.Tomorrow is the next day ... MK Stalin will give a pleasant surprise to the public ..!

இந்த திட்டத்தால் 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 4,153 கோடி செலவிடப்படும். பயனாளிக்கு ரூ 2000 முறையாக போய் சேருகிறதா என்பது கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  நாளை மறுநாள் முதல் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் குடும்பத் தலைவரின் பெயர், நியாய விலைக் கடையின் பெயர், தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போதைக்கு அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்’’ என அவர் தெரிவித்தார். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios