காரைக்குடியில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘1947ல் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட இடம் மேலப்பாளையம். சிவாஜியை விட நடிப்புத்திலகம் என்றால் அது நெல்லை கண்ணன் தான். அவர் தமிழ் கடலாம். அதான் உப்புக்கரிக்குது அதிகமா அவரது பேச்சில்.

எஸ்டிபிபை மீது கொலைவழக்குகள் உள்ளன அவர்கள் நடத்தும் கூட்டத்தில் போய் இந்த டோல்கேட் முருகன் உட்காரலாமா?  அவர் பெயர் என்ன வேல்முருகனா? ஏன்னா அவர் உடைத்து ரவுடித்தனம் செய்தது டோல்கேட்டை. அதனால டோல்கேட் தான் நியாபகம் இருக்கிறது.  வேல்முருகனே நீ எந்த முகத்துடன் போய் எந்த சமுதாயத்திற்காக அங்கே போய் உட்கார்ந்தாய்.  துரோகிகளா? இந்த மாதிரி ஆட்களை மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.  விஷவித்துகள். 

மேடையில் பேச 15 ஆயிரம் பத்தாயிரம் வாங்கிக் கொண்டு வாயை வாடகைக்கு விடுகிற வாய் வியாபாரிகள் மோடியை பற்றி இப்படி பேசலாமா? நெல்லை கண்ணனை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கிறேன். என்னைக்கு இந்த திருமாவளவனின் சரக்கு மிடுக்கு பேச்சு வந்ததோ அன்றிலிருந்து தான் ஆணவக்கொலை ஆரம்பமானது’’ என அவர் தெரிவித்துள்ளார்.