ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதும், மூடுவதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவில் உள்ளது. தருண் அகர்வால் குழுவுக்கு அந்த அதிகாரம் கிடையாது.! என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
(சரிதாம்ணே! ஆனா அந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை செய்லபட வைக்கிறதும், முடக்கி வைக்கிறாதும் டெல்லி கையில இருக்குதுன்னு ஊருக்குள்ள பயபுள்ளைக பேசிக்கிறானுவலே!)

*    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்ட பதினைந்தாயிரம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக பிரதமர் மோடி வழங்க வேண்டும். இது குறைவான தொகையே. அதனால் இன்னும் குறைக்க வேண்டாம்! என ஸ்டாலின் கோரியுள்ளார். 
(க்கும்! டெல்லி ஜன்னலுக்கு கீழே உட்கார்ந்திருக்கிற சி.எம். கேட்டதுக்கே அங்கிருந்து பதில் வரல. இதுல தினமும் பிரதமரை கஞ்சி காய்ச்சி ஊத்துற நீங்க கேட்டுட்டா மட்டும்...)

*    கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றுமில்லை என ஊடகங்களில் கொஞ்சமும் கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேணும்! என கமல் பாய்ச்சல். 
(புயலடிச்ச பிரச்னை மட்டுமா தலைவரே இழப்பு? கைபிடிச்சவன் கைகழுவிட்டா, மகள்களோடு தனியா நிற்பதும் பெருஞ்சேதம்தானே! அந்த நேரத்தில் நீங்க சொன்ன விளக்கங்கள் கூட உங்களை ‘குடும்பத்தின் பேரிடராக’ பார்க்க வைக்குதே!ன்னு சிலர் கூவுறது உங்க காதுல கேக்குதா?)

*    மேகதாது அணை கட்டுவதை தமிழக பா.ஜ.க. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. நிச்சயம் எதிர்ப்போம்! என்று தமிழிசை சவுந்திரராஜன் சபதமிட்டுள்ளார். 
(மேடம் அணைக்கான அடிப்படை பணிகளுக்கான அந்த அனுமதி, இந்த அனுமதியெல்லாம் கொடுத்திருக்கிறது மேலே இருக்கிற உங்க அரசுதான்! மனசுலாயோ?)

*    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், வங்கி மூலம் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய நிதியமைச்சகத்திடம் தெரிவித்து முடிவெடுக்கப்படும்! என ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியுள்ளார். 
(சீக்கரமா முடிவெடுங்க தாயீ! நீங்க லேட் பண்ணினா, தவணையை கட்டலேன்னு சொல்லி முகாமுக்கு தேடி வந்து பேங்க் ஆளுங்க கஜாவை விட மோசமா அடிப்பாங்க.)