Asianet News Tamil

எல்லாமே வெறும் விளாட்டுதானா பரட்ட கோபால்? ரஜினியை நெருக்கும் ரவுசு கேள்விகள்...

எல்லாமே விளாட்டுதானா? சொல்லுங்க கோபால் சொல்லுங்க.)

Today Political bit news
Author
Chennai, First Published Dec 3, 2018, 8:07 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

*    மோடியை நம்பி மக்கள் பெரிதும் ஏமாந்துள்ளனர். ஜி.எஸ்.டி.யால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். நாட்டில் குற்றங்கள் பெருகியுள்ளன! என்று  மாஜி மத்தியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 
(ஆமாங்க, நம்ம கட்சியோட கூட்டணி ஆட்சி நடந்தப்ப  இளைஞர்களுக்கு டபுள் கம்பெனிகள்ள வேலை கொடுத்தீங்க, விவசாயிங்களே திணறும் அளவுக்கு விளைபொருளுக்கு விலை கிடைச்சுது குறிப்பா தீவிரவாதிங்க நம்ம நாட்டின் ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட எதையும் தாக்கவேயில்லை!)

*    மக்களுக்கு நல்லது செய்யணும்னு ஆசைப்பட்டுதான் எம்.எல்.ஏ.வானேன். ஆனால் அதை என்னால செய்ய முடியலை, அந்த லட்சியத்தை நிறைவேற்ற முடியலை! என அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சி தலைவர் கருணாஸ் புலம்பியுள்ளார். 
(அப்புறம் என்னண்ணே, எதுவுமே பண்ண முடியலேன்னா பதவியை ராஜினாமா பண்ணிட்டு போராட்டம் நடத்துறது! ஆணியை அகற்ற வழியில்லாத பதவி எதுக்குண்ணே? மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கி தர்றதுக்கு மட்டுமா?)

*    சினிமாவுல ஹீரோவா நடிச்சது மட்டுமே தகுதியாகிடாது. ஹீரோக்கள் எல்லாருமே உடனே முதல்வராகணும்னு ஆசைப்படுறாங்க. தமிழக மக்களுக்கு கமல் இதுவரை என்ன செய்தார்? என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். 
(கரெக்ட்டுதான் தலைவரே, அது கெடக்கட்டும். அமைச்சரா ரெண்டு பீரியட் தொடர்ந்து பதவியில இருக்கீங்களே, நீங்க இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கும், அட நம்ம மதரைக்கும், அட அதுவும் வேண்டாம் உங்க செல்லூரை சூப்பர் ஊர் ஆக்கிட்டேன்னு சொல்லுங்க நாங்க ஒத்துக்குறோம், ஒதுங்குறோம்.)

*    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தடைகளை மீறி கர்நாடக எல்லைக்கே சென்று அம்மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்த த.மா.கா. திட்டமிட்டுள்ளது! செய்தி. 
(தல நமக்கு எதுக்கு தல இந்த வேண்டாத வேலையெல்லாம். நம்ம கைல இருக்குறதே நாலஞ்சு பேரு. பொசுக்குன்னு கையை பிடிச்சு இழுத்து அவனுங்க ஸ்டேட்டுக்குள்ளே போட்டுட்டானுங்கன்னு வையுங்க, அப்புறம் நம்ம ஊருக்கு தகவல் சொல்ல கூட ஆளிருக்காது. அப்புறம் உங்க இஷ்டம்.)

*    நடிப்பை விளையாட்டாக, பொழுது போக்காக மட்டுமே பார்க்கிறேன். விளையாட்டாக எதிர்கொள்ளும்போதுதான் எனக்கு தேவையான எனர்ஜி கிடைக்கிறது! என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 
(எல்லாமே வெறும் விளாட்டுதானா  கோபால்! நீங்க நாற்பது வருஷமா பல நூறு கோடிகள் சம்பாதிச்சு கொட்டுனது, தமிழன் பாதிபேரை கட் - அவுட் கட்டவெச்சு தறுதலையாக்குனது, இப்போ அரசியலுக்கு வந்து முதல்வராக துடிக்கிறது! எல்லாமே விளாட்டுதானா? சொல்லுங்க கோபால் சொல்லுங்க.)


 

Follow Us:
Download App:
  • android
  • ios