அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் துணை மதலரமைச்சராக பதவியேற்க உள்ளார் என்றும் இதற்காக  அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு மும்பையில் இருந்து அவசரமாக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ்.சென்னை வருகிறார் .

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்  விலகி தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் டிடிவி தினகரன் தனி அணியாக செயல்படுகிறார்.

இந்நிலையில், பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியுடன் எடப்பாடி அணி இணைவதற்கு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த இரு அணிகளும்  இன்று இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக அணிகள் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் 1 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார் என்ற தகவல் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசர வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

அணிகள் இணைந்த பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், துணை முதலமைச்சராக ஓபிஎஸ்ம், அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் இன்றே பதவியேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.