Asianet News TamilAsianet News Tamil

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள், நான் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எடப்பாடியார் நெகிழ்ச்சி

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு 1949ல் இருந்து பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தினை மேலும் வலுப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கும் என கூறிய அவர்,  இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள், நான் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 

Today is a happy day for me, I have completed 4 years in power. Edappadiyar Sentiment Speech.
Author
Chennai, First Published Feb 16, 2021, 4:56 PM IST

முதலமைச்சராக பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று தனக்கு மகிழ்ச்சியான நாள், ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறேன் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.  அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: 

Today is a happy day for me, I have completed 4 years in power. Edappadiyar Sentiment Speech.

தமிழக அரசின் முழுமையான செயல்பாடால் பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொழில் முதலீட்டாளர்களின் சரணாலையமாக தமிழகம் திகழ்கிறது.தொழில் துவங்க முதன்மை மாநிலம் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளது. 2 புதிய தொழில் கொள்கையை அறிமுகம் படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.புத்தாக்க மற்றும் ஆராய்ச்சி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்க தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை உருவாகியுள்ளது. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81% பல்வேறு நிலைகளில் உள்ளன. தமிழக அரசின் நடவடிக்கைகள் நிச்சயம் சாதனை படைக்கும். சிப்காட் 50 ஆண்டு பொன்விழா நினைவாக கிண்டி சிப்காட் வளாகத்தில் 5 லட்சம் மதிப்பீட்டில் பொன் விழா நினைவு விளைவு அமைக்கப்படும் உயர்நிலை குழு திட்டம் தொடர்பாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் 60674 கோடி ரூபாய் முதலீட்டில் 1,00,777 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Today is a happy day for me, I have completed 4 years in power. Edappadiyar Sentiment Speech.

தொழில்பேட்டையில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 500 கோடி மூலதன நிதி ஒதுக்கப்படும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 50 லட்ச ரூபாய் மானியம் இனி 1.5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தகுதி வாய்ந்த தொழில்களுக்கு முதல் 4 ஆண்டு காலம் வரையில் செயல்பட தேவையான முக்கிய அனுமதிகளுக்கு விலக்களிக்கும் "FASTTN" திட்டம் செயல்படுத்தப்படும். வாகன உற்பத்திக்கு ஊக்கமளிக்க புதிதாக உருவாக்கப்படும் மாதிரி வாகனங்களை பதிவு செய்வது எளிதாக்கப்படும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளருக்கான வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்தப்படும் தொகையில் ஆண்டு ஒன்றிற்கு ஒரு பணியாளருக்கு அதிக பட்சமாக 24ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மானியமாக அரசு வழங்கும்.

 Today is a happy day for me, I have completed 4 years in power. Edappadiyar Sentiment Speech.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு 1949ல் இருந்து பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தினை மேலும் வலுப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கும் என கூறிய அவர்,  இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள், நான் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தொழில்வளம் நிறைந்த மாநிலமாக தமிழகம் வளர அனைவரின் ஆதரவும் அவசியம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios