Asianet News TamilAsianet News Tamil

அதெல்லாம் முடியாது... லீவு முடிந்தபின் விசாரிக்கிறோம் - அவசர வழக்கை தள்ளி வைத்த சுப்ரீம் கோர்ட்

to shut down sterlite case is not emergency
to shut down sterlite  case is not emergency
Author
First Published May 28, 2018, 12:11 PM IST


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் பல்வேறு வகையில் போராடி வந்தனர். இதில் துப்பாக்கி சூடு நட்த்தப்பட்டு 13 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை இயங்குவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த அனுமதி கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் அனுமதி புதுப்பிக்கப்படவில்லை. ஆலையின் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரத்நரமாக முட உத்தரவிடக்கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த  சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து அபராதமாக பெறப்பட்ட 100 கோடி ரூபாயை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழக அரசு பயன்படுத்தியதா? என்று கேட்டிருந்தார். 

to shut down sterlite  case is not emergency

பிரச்சினையின் தீவிரம் கருதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டிருந்தார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்குவதை தமிழக அரசு விரும்பவில்லை என துணைமுதல்வர் இன்று தூத்துக்குடி மக்களை சந்தித்தபின் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios