கிறித்தவர்களுக்கும் , இஸ்லாமியர்களுக்கு நெறி இருக்கிறது. போதனை இருக்கிறது. ஆனால் இந்து மதத்தில் அப்படிப்பட்ட நெறிகளும், போதனைகளும் கட்டுக்கதைகளாய் இருப்பதால் தீபாவளிக்கு எப்படி வாழ்த்து சொல்ல முடியும் என திமுக எம்.பி., ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு எதிராக பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மாரிதாஸ், தனது மௌகநூல் பக்கத்தில், ‘’திமுக ஆராசா அவர்கள் இந்துக்களுக்கு எதிரான பேச்சிற்குப் பதில் கொடுக்க இன்று என் பக்க வீடியோ பதிவு வெளியிடப்படும். இந்து மத ஆன்மீக நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இந்த வீடியோவை சென்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். திமுகவில் இருக்கும் இந்து நிர்வாகிகள் எல்லோரும் செத்த பிணங்களா? இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு, கூச்சமாகவே இல்லையா.?

இதை முழுமையாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேருங்கள். ஒரு இஸ்லாமிய கிருஸ்தவ தலைவர்களும் திமுக பேச்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கப் போவதில்லை. எந்த டீவியும் விவாதம் நடத்தப் போவதில்லை. நாம் தான் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். எனவே தீவிரமாக எதிர் வினை காட்டத் தயார் ஆகுங்கள். முடிந்தால் அனைத்து விவாதம் நடத்தும் டீவிகளுக்கும் போன் போட்டு ஏன் இதை விவாதம் நடத்த மறுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பவும். இதை சும்மா விடக்கூடாது’’ எனக் கொதித்தெழுந்துள்ளனர்.