Asianet News TamilAsianet News Tamil

பாஜகவின் அடுத்த மாநில தலைவர் மாரிதாஸ்.. கலக்கத்தில் அண்ணாமலை.. பகீர் கிளப்பும் சவுக்கு சங்கர்

மாரிதாஸ் கைது விவகாரத்தில் அண்ணாமலை வேகமாக அறிக்கை வெளியிடுகிறார், ஆனால் பாஜக தொண்டர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மாரிதாசை  ஆதரிப்பதில் இந்த அளவிற்கு  வேகம் காட்டுவதில் அண்ணாமலைக்கு கொஞ்சம்கூட விருப்பம் கிடையாது.

TNBJPs next state president Maridas .. Annamalai in Fear .. savukku Shankar told.
Author
Chennai, First Published Dec 16, 2021, 11:40 AM IST

பாஜகவின் அடுத்த தலைவராக மாரிதாஸ்தான் என்றும், அவரை பாஜக தொண்டர்கள் கொண்டாடுவது தற்போதைய தலைவர் அண்ணாமலைக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றும் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்து பாஜக வட்டாரத்தில் புயலை கிளப்புவதாக உள்ளது. சமீபத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான விவகாரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதன் விளைவாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் சவுக்கு சங்கர் இவ்வாறு கூறியுள்ளார். 

மதுரை சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். (43) இவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலின் போது பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவைத் தடைசெய்ய வேண்டுமென பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக எதிர்க்கட்சியாக  இருந்த போதிலிருந்தே யூடியூபர் மாரிதாஸ் திமுகவையும், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவுக்கு பல சமூக விரோத கும்பல்களுடன் தொடர்பு உள்ளது என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளையும் அவர் கூறிவருகிறார்.  இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத்  பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை மாரிதாஸ் பதிவிட்டிருந்தார். அந்தக் கருத்தின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். 

TNBJPs next state president Maridas .. Annamalai in Fear .. savukku Shankar told.

அதாவது தனது டுவிட்டர் பக்கத்தில் " திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், இங்கே எந்தப் பெரிய சதிவேலை நடப்பதற்கும் சாத்தியமுண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும் என்ன பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது காஷ்மீரைப்போல தமிழகம் தீவிரவாத கூடாரமாக மாறி வருகிறதா என்ற தொனியில் அவரது இந்த பதிவு இருப்பதாக கூறி, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.  இதேபோல முப்படைத் தளபதி இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்களின் தலையீடு இருப்பதாக சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பிய இன்னும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் மாரிதாசின் கைது நடவடிக்கை பாஜக மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாரிதாசின் கைது நடவடிக்கையை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக வன்மையாக கண்டித்து வருகிறார். 

TNBJPs next state president Maridas .. Annamalai in Fear .. savukku Shankar told.

இதுதொடர்பாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாரிதாஸ் கைது  செய்யப்பட்ட செய்தியை கேட்டறிந்து அவரிடம் தொலைபேசி மூலம் உரையாடினேன், ஜனநாயகம் அளித்துள்ள கருத்துரிமை பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவை விமர்சித்தால் மட்டும் கைதா? என கேள்வி எழுப்பியிருந்தார் மேலும் பாஜகவிடரை கைது செய்யும் நடவடிக்கைகள் தமிழக போலீஸ் இறங்கினால் வேடிக்கை பார்த்துக் கொண்டிக்க மாட்டோம் என அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்நிலையில் மரிதஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்வதாகவும் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இது பாஜக, மாரிதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவினர் மாரிதாஸை கொண்டாடி வரும் நிலையில் ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகர்களில் ஒருவருமான சவுக்கு சங்கர், தமிழக பாஜகவின் அடுத்த மாநிலத்தலைவர் மாரிதாஸ்தான், அந்த மன நிலையில்தான் கட்சி தலைமை உள்ளது என க்கூறியுள்ளார். மேலும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:- 

TNBJPs next state president Maridas .. Annamalai in Fear .. savukku Shankar told.

மாரிதாஸ் கைது விவகாரத்தில் அண்ணாமலை வேகமாக அறிக்கை வெளியிடுகிறார், ஆனால் பாஜக தொண்டர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மாரிதாசை  ஆதரிப்பதில் இந்த அளவிற்கு  வேகம் காட்டுவதில் அண்ணாமலைக்கு கொஞ்சம்கூட விருப்பம் கிடையாது. பாஜக என்ற ஒரு உரையில் ஒரு கத்தி தான் இருக்கவேண்டும் என்பதுதான் அண்ணாமலையில் கொள்கை. தொண்டர்கள் முதல் ஊடகங்கள் வரை எல்லோரும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்தான் அண்ணாமலை, ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு தற்போது மாரிதாஸ் உயர்ந்து கொண்டிருக்கிறார். பாஜக தொண்டர்கள் மொத்தமாக we Support Marodhas என்று பதிவிடுகிறார்கள். இதை அண்ணாமலையால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?  எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் சிறையிலுள்ள மாரி தாசை  பிற மாவட்டங்களிலுள்ள பாஜகவினர் நேரில் சென்று சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ள முன்வந்தபோது, அதை வேண்டாம் என்று  தடுத்திருக்கிறார் அண்ணாமலை. மாரிதாசை பெரியாளாக்க வேண்டாம் என்பதுதான் அவரின் நோக்கம். அண்ணாமலையை காட்டிலும் மாரிதாஸ் சிறப்பாக செயல்படுகிறார் என்பதால் மாரிதாஸ் பாஜகவின் மாநில தலைவராகவும் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அண்ணா மலையுடன் மாரிதாசை ஒப்பிடும்பொழுது அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை, இவ்வாறு சவுக்கு சங்கர் கூறியுள்ளார்

 

Follow Us:
Download App:
  • android
  • ios