Asianet News TamilAsianet News Tamil

"ஆதாரம் இருந்தா முதல்ல காட்டு பார்ப்போம்.." அண்ணாமலையை டாராக கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி !!

பி.ஜி.ஆர். நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.

Tn minister Senthil balaji answered to bjp tn president annamalai question about bgr company corrubtion
Author
Tamilnadu, First Published Mar 26, 2022, 8:23 AM IST

எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்துக்காக, நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்துடன் விதிகளை மீறி தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். பி.ஜி.ஆர். நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடமும் அண்ணாமலை புகார் அளித்தார்.

Tn minister Senthil balaji answered to bjp tn president annamalai question about bgr company corrubtion

கோவை ராமநாதபுரம் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். மேலும் அங்கு உள்ள பணியாளர்களிடம் எவ்வாறு செயல்படுகிறது எந்த மாதிரியான சேவை கழகம் அழிக்கப்படுகிறது அதை எவ்வாறு உரிய நேரத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தெல்லாம் ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக இந்த 24 மணி நேர சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை சாலை வசதிகள் பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 1749 அழைப்புகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சில புகார்களை உரிய கால அவகாசத்தில் முடித்து வைத்து இருக்கிறோம் மேலும் இந்த சேவை மையத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

Tn minister Senthil balaji answered to bjp tn president annamalai question about bgr company corrubtion

பி ஜி ஆர் டெண்டர் விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி சில பேரின் தனிநபர் விளம்பரத்திற்கு சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு நான் அன்றைய பொழுதை கழித்துவிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு டிஜிஆர் டெண்டர் விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்களோடு ஆவணங்களை வழங்கினால் அது குறித்து நான் பதில் அளிக்க தயாராக உள்ளேன்' என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios