மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார். ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.

விருதுநகர், தேவாங்கர் கல்லூரி அருகே மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்றும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, தி.நகரில் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்தில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர், பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீன்பிடி தடைகாலத்தின்போது, மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார். பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று கூறினார்.

மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவை நானும் கேட்டதாக அவர் கூறினார்.

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோரை என்கவுண்டர் செய்ய வேண்டும். ராமமோகன் ராவ் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,  ராம மோகன் ராவ் அதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் செயல்பட்டார். ஜெயலலிதா மணரம் குறித்து, ராம மோகன் ராவை கைது செய்து
விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.