Asianet News TamilAsianet News Tamil

#BREAKING ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... தமிழக அரசு உத்தரவு...!

 தற்போது மீண்டும் கொரோனா ஊரடங்கை ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

TN Government again extend corona lock down to july 5th
Author
Chennai, First Published Jun 25, 2021, 7:22 PM IST

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ம் தேதியோடு நிறைவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளார் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல் ஆணையர், உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழு பங்கேற்றனர். 

TN Government again extend corona lock down to july 5th

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பல்வேறு தளர்வுகளுக்கு அரசிடம் மருத்துவர்கள் குழு பரிந்துரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா ஊரடங்கை ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த முறையைப் போலவே மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

TN Government again extend corona lock down to july 5th

வகை 1 - (11 மாவட்டங்கள்)  நோய்த் தொற்று  அதிகமுள்ள மாவட்டங்கள் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடு துறை  மாட்டங்களும், வகை 2ல் அரியலூர், கடலூர். தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் இராணிப்பேட்டை, சிவகங்கை தேனி தென்காசி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 23 மாவட்டங்களும், வகை 3 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் அடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios