தமிழிசை சௌந்திர்ராஜனுக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமானது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி புகழந்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழிசை சௌந்திரராஜன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். வரும் டிசம்பர் மாதத்துடன் அவரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் , அவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சி எல்லைகள் கடந்து தமிழிசைக்கு அரசியில் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்,ராஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அரசியலில் நேர் எதிரியான காங்கிரஸ் கட்சியிலிருந்தும் தமிழிசைக்கு வாழ்த்து கூறப்பட்டுள்ளது. 

தமிழிசைக்கு ஆளுனர் பதிவி வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தமிழிசைக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பணியாற்றிவந்த டாக்டர் தமிழிசை சௌந்திர்ராஜன் அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருப்பதற்காக அவரை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.கொள்கை ரீதியாக கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு இடையில்  கருத்து மோதல்களை மிகுந்த நாகரீகத்தோடு நடத்தியவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன். அவருக்கு ஆளுனர் பதவி அளித்திருப்பது மிகவும் பொருத்தமாகும் . இவ்வாறு அவரின் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது