"நாங்கள் கொண்டு வருவது அரிசி.. நீங்கள் கொண்டு வருவது உமி முதல்வரே.." ஸ்டாலினை போட்டு தாக்கிய அண்ணாமலை !

தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து இங்கிருந்து டெல்லி சென்று மூன்று நாள் தங்கிவிட்டு நாங்கள் தமிழக மாணவர்களை மீட்டெடுத்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியிடுகிறார். 

TN Bjp president Annamalai criticize mk stalin govt in Indian students in Ukraine at Namakkal

கும்பாபிஷேக விழா :

நாமக்கல் அடுத்துள்ள கே. புதுப்பாளையம் கிராமத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் குலதெய்வக் கோயிலான ஸ்ரீ பாமா ருக்மணி சமேத நந்த கோபால சுவாமி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

TN Bjp president Annamalai criticize mk stalin govt in Indian students in Ukraine at Namakkal

இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, 'தமிழக அரசை பல பெயர் சொல்லி அழைக்கிறார்கள். பத்து மாதம் கழித்து இந்த அரசுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் அறிவிப்பு அரசு என்று கூற வேண்டும். மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றி அறிவிப்பு அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. 

திமுக ஒரு அறிவிப்பு அரசு :

உக்ரைன்- ரஷ்யா போரில் தமிழக மாணவர்கள் 1866 பேர் பிரதமரின் சீரிய முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து இங்கிருந்து டெல்லி சென்று மூன்று நாள் தங்கிவிட்டு நாங்கள் தமிழக மாணவர்களை மீட்டெடுத்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியிடுகிறார். முதல்வர் ஸ்டாலின் எங்களின் முயற்சியால் தான் தமிழகத்திற்கு அனைத்து மாணவர்களும் பத்திரமாக வந்து சேர்ந்ததாக அறிக்கையில் கூறியுள்ளார். 

TN Bjp president Annamalai criticize mk stalin govt in Indian students in Ukraine at Namakkal

இது எப்படி இருக்கிறது என்றால்? எங்கள் ஊரில் சொல்லும் பழமொழி போன்று உள்ளது. 'நான் அரிசு கொண்டு வறேன். நீ உம்மி கொண்டு வா' இரண்டையும் சேர்த்துக் கொள்வோம். அதை புடைப்போம். பின்னர் அதை சமைத்து சாப்பிடுவோம். எனவே நாங்கள் கொண்டு வந்தது அரிசி. நீங்கள் கொண்டு வந்தது உம்மி என்று தான் கூற வேண்டும். இதனால் தான் ’அறிவிப்பு அரசு’ என்று கூறி இருக்கிறோம் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios