Asianet News TamilAsianet News Tamil

டிவி. விவாதங்களில் பங்கேற்கமாட்டோம்... அதிமுக வழியில் தமிழிசை திடீர் அறிவிப்பு!

திடீரென தமிழக பாஜக சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதற்குக் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. பொத்தாம் பொதுவாக சம நிலையும் சமவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TN BJP functionaries wont participate in tv debate show
Author
Chennai, First Published Jul 3, 2019, 6:19 AM IST

தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக பாஜகவினர் பங்கேற்க மாட்டார்கள் என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென அறிவித்துள்ளார்.TN BJP functionaries wont participate in tv debate show
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்த பிறகு, தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு மாத காலத்துக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி தடை விதித்தது. இதேபோல அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தபோதும் அதிமுக சார்பில் ஊடகத்தில் கருத்து சொல்ல அக்கட்சி தலைமை தடை விதித்தது. சில தினங்களுக்கு முன்புதான் அந்த தடையை அதிமுக விலக்கிக்கொண்டது. தற்போது அந்த வரிசையில்  தமிழக பாஜகவும் சேர்ந்துள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப்போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

TN BJP functionaries wont participate in tv debate show
இது குறித்து மாநில  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்கு மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது. ஆனால், சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் தற்போது பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.TN BJP functionaries wont participate in tv debate show
திடீரென தமிழக பாஜக சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதற்குக் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. பொத்தாம் பொதுவாக சம நிலையும் சமவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிசையின் இந்த அறிவிப்பு சமூக ஊடங்களில் வைரலாகிவருகிறது. பலரும் அவருடைய அறிவிப்பை விமர்சித்தும் கிண்டலாகப் பதிவிட்டும் வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios