தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தஞ்சை தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளது. தஞ்சை மக்களவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என்.ஆர். நடராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 2 தொகுதியில் போட்டியிடுவதால் தமாகாவுக்கு கட்சிக்கு தேர்தல் சின்னமாக மிதிவண்டியை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தியது.

இதனை ஏற்று, மக்களவை தொகுதிக்கு மட்டுமே தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை பயன்படுத்தலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நிபந்தனை விதித்திருந்தார். இந்நிலையில் தமாகாவுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு செய்திருந்தார்.

 

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையில் போது சைக்கிள் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மேலும் சைக்கிள் சின்னம் வழங்க குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், மக்களவை தேர்தலில் தஞ்சாவூரில் மட்டும் அக்கட்சி போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. 

இந்நிலையில் தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிடும் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிட உள்ளார்.