time asked to meet Modi but no answer till come Chief Minister Edappadi says
சேலம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சி விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்து, "அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சி விவசாயப் பிரதிநிதிகளும் ஒன்றாக சேர்ந்து பாரதப் பிரதமரை சந்திக்க வேண்டும்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பாரதப் பிரதமருக்கு அனுப்பி வைத்தோம்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் உங்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக எங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரவேண்டும் என்று ஏற்கனவே கடிதம் அனுப்பினோம். இதுவரை எங்களுக்கு பதில் வரவில்லை.
இருந்தாலும் உச்ச நீதிமன்றம் ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு வழங்கியது. அதன்பிறகு ஆறு வாரம் காலத்திற்கு பிறகு அதை நிறைவேற்றவில்லை.
எனவே, உடனடியாக நாம் சீராய்வு மனுவை தாக்கல் செய்தோம். அதன் அடிப்படையிலே உச்ச நீதிமன்றம் வருகிற மே மாதம் 3-ஆம் தேதிக்குள் மத்திய அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு வழங்கியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
