Asianet News TamilAsianet News Tamil

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை.. கொங்கு மண்டலத்தில் மண்டையை பிளக்கும் வெயில்..

தமிழகத்தில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 07.04.201 மற்றும் 08.04.2021 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


 

Thundershowers at one or two places in South Tamil Nadu .. Heavy Hot Condition in Kongu region ..
Author
Chennai, First Published Apr 7, 2021, 4:33 PM IST

தமிழகத்தில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 07.04.201 மற்றும் 08.04.2021 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். குமரிக்கடல் பகுதியில் ( 1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 

Thundershowers at one or two places in South Tamil Nadu .. Heavy Hot Condition in Kongu region ..

09.04.201 முதல் 11.04.2021 வரை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

Thundershowers at one or two places in South Tamil Nadu .. Heavy Hot Condition in Kongu region ..

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்  மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26  டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு வாலிநோக்கம் (ராமநாதபுரம்), தென்காசி, வாலிநோக்கம் ARG (ராமநாதபுரம்) 
தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது .  

 

Follow Us:
Download App:
  • android
  • ios