Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் இடி, மின்னல், மழை.. வானிலை ஆய்வு மையம் அதிரடி தகவல்.

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் (ஒரு கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 1-5-2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

Thunder  lightning, rain in these areas for the next 4 days .. Meteorological Center Action Information.
Author
Chennai, First Published May 1, 2021, 5:17 PM IST

2-5-2021 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், 3-5-2021  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

4-5-2021 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

Thunder  lightning, rain in these areas for the next 4 days .. Meteorological Center Action Information.

5-5-2021 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்று ஒப்பு ஈரப்பதம், 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  36 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக, மாலை முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். 

Thunder  lightning, rain in these areas for the next 4 days .. Meteorological Center Action Information.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு இரணியல் (கன்னியாகுமரி) 5 சென்டிமீட்டர் மறையும் திருமூர்த்தி அணை ( திருப்பூர்) 4 சென்டி மீட்டர் மழையும், போடிநாயக்கனூர் (தேனி) 3 சென்டி மீட்டர் மழையும், திருப்பத்தூர், குழித்துறை (கன்னியாகுமரி) சோத்துப்பாறை (தேனி) தலா 2 சென்டி மீட்டர் மழையும் டேனிஷ்பேட்டை (சேலம்) கொடைக்கானல், ஆர்எஸ் மங்கலம் (ராமநாதபுரம்) தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் 2-5-2021 இரவு 11 30 மணி வரை கடல் அலைகள் உயரும் 1.0 முதல் 2.5 மீட்டர் வரை எழுப்பக்கூடும், எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios