Asianet News TamilAsianet News Tamil

எந்தநாட்டில் இருந்தாலும் மோடிக்கு எண்ணமெல்லாம் இந்தியாவில்தான்.. வாக்காளர்களுக்கு போட்ட சூப்பர் டுவிட்.

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இரு மாநில மக்களும் பெருமளவில் வெளியே சென்று மாநில சட்டசபைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் தவறாது வாக்களிக்க வேண்டும்.  

Though in another country, the whole idea is in India .. Modi's super tweet to the voters.
Author
Chennai, First Published Mar 27, 2021, 1:45 PM IST

தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் அனைவரும் தவறாது வாக்களிக்க முன்வர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க அழைப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.5 மாநில தேர்தலின் முதற்கட்டமாக அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில்  77 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் பல கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாதங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல்-6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலில் துவக்கமாக, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  77 தொகுதிகளில் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை வெயில் மற்றும் கொரோனா எதிரொலியாக இம்முறை தேர்தல் வாக்குப்பதிவு 1 மணி நேரம் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது. 

Though in another country, the whole idea is in India .. Modi's super tweet to the voters.

மேற்கு வங்கம் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கொண்ட மாநிலம் என்பதால், மார்ச் 27 முதல்  ஏப்ரல்29 ஆம் தேதி வரை என மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல அசாமில் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல்-6 ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அந்தவகையில் அசாமின்  47 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் என ஒட்டுமொத்தமாக 77 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று முதல் கட்டமாக தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களும் பதற்றம்  நிறைந்த வாக்குச்சாவடிகள்நிறைந்த மாநிலங்கள் என்பதால், முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

Though in another country, the whole idea is in India .. Modi's super tweet to the voters.

சிறு சிறு அசம்பாவிதங்களுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உள்ளூர் போலீசாருடன் இணைந்து துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவரும் 30 தொகுதிகளில் தலா 29 தொகுதிகளில் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்டமாக 47  தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடி வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருந்துவருகிறார். இன்று காலை 6 மணி முதலே மக்கள் அசாம் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பிரதமர் அவ்விரு மாநில மக்களையும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி டுவிட்டர் செய்துள்ளார். அவரின் டுவிட்டர் பதிவில், 

Though in another country, the whole idea is in India .. Modi's super tweet to the voters.

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இரு மாநில மக்களும் பெருமளவில் வெளியே சென்று மாநில சட்டசபைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் தவறாது வாக்களிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட வரிசை எண்ணிக்கையில் மக்கள் வாக்களிக்க வேண்டும், தகுதியுள்ள ஒவ்வொருவரும் இத்தேர்தலில் தவறாது வாக்களிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.  குறிப்பாக எனது இளம் நண்பர்கள் அனைவரும் வாக்களிக்க முன்வருமாறு அழைக்கிறேன் என வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்க தேர்தல் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், முதல் கட்ட தேர்தல் தொடங்கிவிட்டது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் கடமையை தவறாமல் ஆற்றி வரலாறு படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios