எந்த தூத்துக்குடி தோற்கடித்ததோ... அங்கேயே "பூரண கும்ப மரியாதை"..! கெத்து காட்டும் தமிழிசை..!

தூத்துக்குடிக்கு வருகை புரிந்த தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற பெற்ற இருக்கும் பாரதி தமிழ் சங்கம் விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அருண் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது காவல்துறையினரின் மரியாதையை தமிழிசை ஏற்றுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் திருச்செந்தூர் தனது குடும்பத்தினருடன் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு கோவில் நிர்வாகத்தின் தலைமையில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் காவல்துறையினரின் மரியாதையும் ஏற்றுக்கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியை விட சற்று குறைவான வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பெரிதாக பகிரப்பட்ட கருத்துகளில் தூத்துக்குடியில் தமிழிசைக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டது என்பதே.... ஆனால் இன்று அதே தூத்துக்குடியில் தமிழிசை அவர்களுக்கு அரசு மரியாதையுடன் பூரண கும்ப மரியாதை  வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.