thoothugudi gun shoot again and again

அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள் குவிந்தனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு எதிராக காவல்துறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மீண்டும் 2முறை வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து தப்பியோடினர் பின் 50 வாகனத்தில் காவல்துறையின் அணிவகுப்பு நடத்தி மக்களை ஒன்று கூட வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர்.

இந்நிலையில் அண்ணா நகரில் துப்பாக்கி சூட்டினை தற்போது நடத்தியுள்ளது. இதில் ஒருவர் பலி மூவர் படுகாயம் அடைந்து மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். . இறந்தவர் பெய காளியப்பன் (22) எனத் தெரியவந்துள்ளது.அண்ணா நகரில் காவல் துறையினர் வீடுவீடாக சோதனை நடத்தியுள்ளனர் எனத் தெரிகிறது.

இந்நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.