மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார் .  இந்தியாவின் உண்மையான ஜிடிபி  1.5% தான் என அவர் பகீர் கிளப்பியுள்ளார்.  எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது .  இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.   அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்ன மத்திய அரசும் தெரிவித்துவருகிறது. 

ஆனால் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை .  இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த  பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உருப்பினருமான சுப்ரமணியசாமி ,  பொருளாதாரம் குறித்து ஊடகங்களில் கேள்விக்கு அமைச்சர் பதில் கூறாமல் அதிகாரிகளை கைகாட்டுகிறார்,  நாட்டில் என்ன பிரச்சனை நிலவுகிறது.  ஆனால் எதையுமே பொருட்படுத்தாமல் நிதியமைச்சர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்து வருகிறார் .  நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றாலே என்ன என்று தெரியாது என சாமி கடுமையாக சாடியுள்ளார்.  மேலும் பிரதமரை சுற்றியுள்ள ஆலோசகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பிரதமரிடத்தில்  பொருளாதாரத்தின் உண்மைத்தன்மையை கூறாமல் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருப்பதாக பொய்யான தகவல்களை கூறி அவரை நம்பவைக்கின்றனர் என்றார்.

 

 இன்றைய உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் என்னவென்று தெரியுமா  4.8 சதவீதமாக குறைந்து  வருவதாக அவர்கள் கூறுகின்றனர்,  ஆனால் ஜிடிபி வளர்ச்சி 1.5% தான் இருக்கும் என தெரிவித்தார்.  ஏற்கனவே மோடி அரசுக்கு பொருளாதாரத்தின் அடிப்படை கூட தெரியவில்லை என கருத்து தெரிவித்திருந்த சுப்ரமணியசாமி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவிப்பது  குறித்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.