Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் வாக்குகளை சிதறடிக்க பாஜக ஏந்தியுள்ள ஆயுதம் இதுதான்.. புட்டு புட்டு வைக்கும் தமிழக எம்.பி.

நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது. கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு வெளியிட சுப்பராயன் பெற்றுக்கொண்டார். 

This is the weapon that the BJP is carrying to scatter the votes of the DMK.
Author
Chennai, First Published Mar 22, 2021, 4:49 PM IST

நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது.

கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு வெளியிட சுப்பராயன் பெற்றுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீர பாண்டியன் உடன் இருந்தார். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சட்டமன்ற தேர்தல் என்றாலும் மத்தியில் ஆளும் பாஜக தீய செயல்களை செய்து வருகிறது. பல முனை போட்டிகளை உருவாகியுள்ளது. இந்த பல முனை போட்டி என்பது பாஜக, அதிமுகவால் திணித்து உருவாக்கப்பட்டது. இந்த போட்டி இயல்பானது அல்ல, உருவாக்கப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டினார்.

 This is the weapon that the BJP is carrying to scatter the votes of the DMK.

மேலும் மத்தியில் 7 ஆண்டு காலம் பாஜக இருந்த போது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழ் தேசியம் என்பது வேறு சீமான் கோஷம் என்பது வேறு. தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அனைத்தும் திமுக வைதான் ஆதரிக்கிறார்கள். சீமானை தவிர. திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைத்து பாஜக வர கூடாது என்று இந்த தேர்தலில் வெற்றியை நோக்கி நிற்கும் போது, அந்த வாக்குகளை சித்தரடிக்கும் வகையில் பாஜக ஏந்தியுள்ள ஆயுதம் தான் தமிழ் தேசியம். 

This is the weapon that the BJP is carrying to scatter the votes of the DMK.

இன்றைய நிலைமையில் 3ல் ஒரு பங்கு ஏழைகள் இந்தியாவில் உள்ளனர்.18 லட்சம் கோடிதான் தமிழ் நாட்டின் ஜிடிபி. தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், கிராம புற மக்கள் ,நகர்புறம் நோக்கி வராமல் இருக்க கிராமப்புற சிறு குறு தொழிலுக்கு நாங்கள் முக்கியதும் கொடுத்துள்ளோம். அதேபோல் விவசாய நலன் சார்ந்த திட்டங்களுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios