Asianet News TamilAsianet News Tamil

ஏப்ரல் வரை தேர்தல் கிடையாது !! இன்னும் 3 மாதத்துக்கு இடைத் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை !!

திருவாரூர் உட்பட 19 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் வரை இடைத் தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டதையடுத்து அத் தொகுதிகளில் ஏப்ரல் வரை தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆளும் அதிமுக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.

thiruvarur election cancel
Author
Delhi, First Published Jan 7, 2019, 9:14 AM IST

வரும் 28 ம் தேதி நடக்க இருந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

அதில், திருப்பரங்குன்றம் தவிர மீதமுள்ள திருவாரூர் உள்ளிட்ட 19 தொகுதிகளில் ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

thiruvarur election cancel

கஜா புயல் நிவாரண பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3 ம் தேதி தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கடிதம் எழுதி இருந்தார்.  அதாவது திருப்பரங்குன்றம் தவிர 19 தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

அதிமுக, திமுக, காங், பா.ஜ., தேமுதிக, மா.கம்யூ உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என அனைத்து கட்சி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கூறி இருந்தன. தேர்தலை தள்ளி வைக்கமாறு அரசியல் கட்சிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை அளித்திருந்தன.

thiruvarur election cancel

தேர்தலில் ஈடுபட வேண்டிய அதிகாரிகள் தான் புயல் நிவாரண பணிகளிலும் ஈடுபட வேண்டி இருப்பதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையிலேயே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திமுக ,அமமுக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்திருந்தது. அதிமுக மட்டும் இன்றும் அறிவிக்காமல் இருந்தது,. இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆளும் அதிமுகவுக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது. அதுவும் ஏப்ரல் மாதல் வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது என அறித்திருப்பது இபிஎஸ் தரப்பை மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது,

தற்போது தேர்தல் நடைபெற்று திமுக ஜெயித்து விடடாலும் ஆளும் அரசுக்கு பிரச்சனைதான். அதே நேரத்தில் அமமுக ஜெயித்து வந்தாலும் பிரச்சனைதான். இந்நிலையில் தேர்தல்  ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஆளும் அதிமுக அரசுக்கு பெரு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios