Asianet News TamilAsianet News Tamil

’பொங்கல் பரிசு யாருக்கு வேணும்?’...அப்செட் ஆன திருவாரூர் மக்கள்...

தற்போது தேர்தல் ரத்தாகியுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டு திருவாரூர் மக்களுக்கும் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

thiruvarur bye election cancelled.public upset
Author
Thiruvarur, First Published Jan 7, 2019, 10:09 AM IST

இடைத்தேர்தல் திடீரென ரத்தானதால் பொங்கல் பரிசு திருவாரூர் மக்களுக்கும் உண்டு என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக அதிர்ச்சி அடைந்துள்ளனர் திருவாரூர் மக்கள்.thiruvarur bye election cancelled.public upset

தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அரிசு, கரும்பு, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அரசுக்கு ரூ.17 ஆயிரத்து 500 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

சமீபத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அங்கு தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. எனவே அந்த தொகுதியை தவிர பிற தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் ரத்தாகியுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டு திருவாரூர் மக்களுக்கும் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.thiruvarur bye election cancelled.public upset

தினகரனிடம் ‘20ரூபாய்’ டோக்கனும், அதிமுக மற்றும் திமுக மூலம் கணிசமான பொங்கல் பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்த திருவாரூர் தொகுதி மக்கள் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios