திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன.

 

ருவாரூர் எம்.எல்.ஏவும், திமுக தலைவருமான மு.கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை தொடர்ந்து திருவாரூர் சட்ட மன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் திருவாரூரில் ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி ஜனவரி 3ம் தேதி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடம்மடும்.  10ம் தேதி வேட்பு மனு நடைபெறும். 

11ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 14ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 28ம் தேதி தேர்தல் நடைபெறும். 31ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஹரியானாவில் ஜிண்ட் தொகுதிக்கும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா கையெழுத்து விவகார வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.