அரசு மருத்துவரை தாக்கிய வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக அரவிந்த் பணியாற்றி வருகிறார். இவர் பேட்டை பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்துள்ளார். இதைச் சாப்பிட்ட சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட பாஜக தலைவர் சிவா, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். 

இதைத்தொடர்ந்து மருத்துவர் அரவிந்துடன்  மாவட்ட பாஜக தலைவர் சிவா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவரை பேட்டை சிவாவுடன் வந்த ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக மருத்துவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில்புகார் அளித்தார். இதை தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் பேட்டை சிவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.