thirunavukkarasar slams modi and bjp

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியுற்றால், அடுத்த பிரதமர் வேட்பாளராக பாஜக சார்பில் மோடி முன்னிறுத்தப்படமாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா கோவையில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்க்ரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய திருநாவுக்கரசர், கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் தவறில்லை. ஒரு மூத்த தலைவர் உடல்நில சரியில்லாமல் இருக்கும்போது அவரைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், பிரதமர் மோடி தனது தோழி எனக்கூறிவந்த ஜெயலலிதாவை அவர் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் ஒரு முறைகூட பார்க்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியுற்றால், 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பாஜக சார்பில் மோடி முன்னிறுத்தப்படமாட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மற்றொரு சாமியார்(யோகி ஆதித்யநாத்)தான் முன்னிறுத்தப்படுவார் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.