அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அனைத்து கட்சி கூட்டம் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கற்றனர். அனைத்து கட்சி கூட்டம் நிறைவுக்குப் பின், தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்து கட்சி, விவசாய சங்கங்களை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்ட்ட தீர்மானத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். 

உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத்திய அரசு மதித்து காவிரி லோண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி பிரச்சனைக்கு அரசியல், சட்டம், நிர்வாகம் ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.