* திருநாவுக்கரசர் மீது எனக்கு எந்த தனிப்பட்ட கோபமும் கிடையாது, தனி அபிப்ராயமும் கிடையாது. அவரது செயல்கள் சரி இல்லாததால் என் கருத்தை தெரிவித்தேன். அவர் மீது இதுவரை மேலிடத்தில் எந்த குற்றச்சாட்டையும் நான் சொல்லியதில்லை: குஷ்பூ (அப்ப நீங்களும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் டெல்லிக்கு கொண்டு போயி, கொண்டு போயி கொடுத்தது வெறும் மளிகை சாமான் லிஸ்ட்டு தானா கோபால்)

* மோடியின் திட்டங்கள் தோற்றுவிட்டன, மோடியின் ஆட்சி தோற்றுவிட்டது என்று என்னை திட்டுகிறார்கள் எதிர்கட்சிகள். பிறகு ஏன், மெகா கூட்டணியை உருவாக்குகிறீர்கள்?: நரேந்திர மோடி. (தலைவரே அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நாம என்ன சிங்கிள் சிங்கமாவா காங்கிரஸை எதிர்த்து நின்னோம்? உங்களுக்கு வந்தா பிளட்டு, அடுத்தவனுக்கு வந்தா வெறும் நீர் சொட்டு இல்ல?)

* தமிழக பி.ஜே.பி.யில் கோஷ்டி பூசல் எனும் பேச்சுக்கே இடமில்லை. இதுவரையில் எங்கள் தலைவர்கள் யாரையாவது நான் திட்டி பேசியிருக்கேனா? காங்கிரஸில்தான் முட்டல், மோதலெல்லாம் நடக்கும்: ஹெச்.ராஜா. (அப்டிங்களா தல? திருப்பூர்ல நடந்த பிரதமர் நிகழ்ச்சியில உங்களை வெறுமனே மொழிபெயர்ப்பாளரா மட்டுமே வெச்சாங்களாமே, தனியா பேசுறதுக்கு டைமே தரலையாமே, இது பேரு கோஷ்டி பூசல் இல்லாம கோவக்கா பொரியலா)

* வந்தா ராஜாவாதான் வருவேன்! படம் பெரும் தோல்வியடைந்ததால் தியேட்டர் ஓனர்கள் உடனே அந்தப் படத்தை தூக்கிவிட்டார்களாம். உடனே சுந்தர்.சி போன் போட்டு ‘கொஞ்சம் வெயிட் பண்ணலாமே சார். காமெடி கலந்த மசாலா படம், லேட்டனாலும் பிக் அப் ஆகும்.’ என்றாராம்: செய்தி. (பாஸு தியேட்டர்காரங்க வெயிட் பண்ணலாம் ஆனா கேண்டீன்ல பப்ஸும், சமோசாவும் வெயிட் பண்ணாதே!  எத்தனை நாள்தான் மூட்டையா  கட்டி வெளியில கொட்டுவாங்க பாவம்.)

* வரி என்பது மக்கள் செலுத்தும் அளவில்தான் இருக்க வேண்டும். அதை மிஞ்சும் அளவில் இருக்கக்கூடாது. பிறகு அது மக்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடும்: கே.எஸ்.அழகிரி. (வாவ்! வாட் எ தத்துவம் தல, இதுவரைக்கும் யாருமே சொல்லிடாத இப்படியொரு தகவலை சொல்லத்தானா நீங்க அரசரை தூக்கியடிச்சுட்டு தமிழக காங்கிரஸ் தலைவர்  பதவியில வந்து உட்கார்ந்தீங்க? ஐ லைக் யூ.)