Asianet News TamilAsianet News Tamil

லேடீஸ் சீட்டில் அமர்ந்து பயணம் செய்த திருமாவளவன்... எடுத்துரைத்த ஹெச்.ராஜாவுக்கு கண்டனம்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., டெல்லி – ஹரியானா எல்லை திகிரி பார்டரில் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று பங்கேற்றார்.

Thirumavalavan who sat in the ladies' seat and traveled ... Condemnation to H. Raja who mentioned
Author
Tamil Nadu, First Published Feb 11, 2021, 10:39 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., டெல்லி – ஹரியானா எல்லை திகிரி பார்டரில் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று பங்கேற்றார். அப்போது அவர், மெட்ரோ ரயில் பயணத்தில் பெண்கள் இருக்கை என்று எழுதியிருக்கும் சீட்டில் அமர்ந்து பயணம் செய்த போட்டோ வெளியாகியிருக்கிறது.

இந்த போட்டோவை பாஜக முன்னாள் தேசிய செயலாலர் எச்.ராஜா ‘’ஓ இதுதான் அடங்க மறு அத்துமீறு என்பதோ?’’என்று ட்விட்டரில் பதிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பாடல்தான் ‘அடங்க மறு.. அத்து மீறு..’’என்பது. ஹெச்.ராஜாவின் இந்தபதிவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை பதிந்துள்ளனர். Thirumavalavan who sat in the ladies' seat and traveled ... Condemnation to H. Raja who mentioned
 
’’இதுதான் உண்மையான அடங்க மறு…’’என்றும் திருமாவளவனின் சமீபத்திய செயல்பாடுகளையும் பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளை கண்டனங்களும் தெரிவித்துள்ளனர். ’’சமூகம் சார்ந்த விஷயத்தை தவிர அனைத்தையும் பேசும் எச் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்’என்றும் ’’இதுக்குதான் படிங்கடான்னு சொல்றது.. இந்திதான் தெரியாது.. ஆங்கிலமும் தெரியாதா.. இவனுக்கும் கூவ சிலர்.. காலக்கொடுமைடா’’என்கிறார் ஒருவர்.

 

’’எச்.ராஜா என்றாலே எப்பவும் கீழ்த்தரமாக மட்டுமே சிந்திப்பார்’’என்கிறார் மற்றொருவர்.  இந்த விவகாரத்தில், ‘’அது புத்தி அவ்வளவுதான், எந்த உயரத்துக்கு போனாலும்..’’என்றும் ‘’சாதியை குறிப்பிடுகிறீர்கள்... தவறு. உங்களை எல்லாம் அரசியல்வாதியாக அமர செய்த எங்களை செருப்பால் அடிக்கணும். இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா எச்.ராஜா அவர்களே...’’என்று பதிவிட்டு வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios